வாஷிங்டன்: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குலால் அமெரிக்காவில் இது வரை 82,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சீனா, இத்தாலியை அமெரிக்கா முந்தி முதலிடத்தை பிடித்துள்ளது.
சீனாவின் வூகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் உலகில் உள்ள 196 நாடுகளிலும் பரவி மக்களை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறது.
முதன் முதலாக பரவிய சீனாவில், இது வரை 81, 285 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் அங்கு 3,287 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி உள்ளது. அந்நாட்டில் மொத்தம் இதுவரை 80,600 பாதிக்கப்பட்ட நிலையில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில், அதாவது 8,215 பேர் உயிரிழந்துள்ளனர்.