டில்லி மாநாடு: 5 ரயில்களில் பயணித்தவர்கள் யார்? விழி பிதுங்கும் ரயில்வே

புதுடில்லி: டில்லியில் நடந்த முஸ்லீம் மாநாட்டுக்கு சென்றவர்கள் பயணித்த ரயில்களில், அவர்களுடன் பயணித்த பயணிகளின் விவரங்களை ரயில்வே சேகரித்து வருகிறது.

தடை உத்தரவு அமலில் இருக்கும்போதே, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மத பிரசங்க கூட்டத்தை நடத்தி, கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்துள்ளது, டில்லி நிஜாமுதீன் பகுதி தப்லிக் ஜமாத். இக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் பலர் ரயில் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். அவர்களை கண்டறியும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், ரயில்வேயில் அவர்களுடன் பயணித்த ஆயிரக்கணக்கான பயணிகளின் விவரங்களை கண்டறியும் முயற்சியில் ரயில்வே ஈடுபட்டுள்ளது.



5 ரயில்கள்:



முஸ்லிம் மாநாடு கடந்த, 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டில்லியில் நடந்தது. இதில், 280 வெளிநாட்டவர் உட்பட, 8,000 பேர், வெவ்வேறு நாட்களில் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து, மார்ச் 13 முதல் மார்ச் 19 வரை டில்லியிலிருந்து கிளம்பிய ஆந்திரா செல்லும் தூரந்தோ எக்ஸ்பிரஸ், சென்னை செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், ராஞ்சி செல்லும் ராஜதானி எக்ஸ்பிரஸ், சம்பந்த் கிராந்தி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் அவர்கள் சொந்த ஊர் திரும்பியிருப்பர். ரயில்களின் அவர்களுடன் பயணித்த பயணிகளின் விவரங்களை ரயில்வே சேகரித்து வருகிறது. ஒவ்வொரு ரயிலிலும் சுமார் 1200 பயணிகள் பயணித்ததால், பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

மார்ச் 13ல் ஏபி சம்பார்க் கிரந்தி எக்ஸ்பிரஸில் பயணித்த இந்தோனேஷிய பயணிகள் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜ்தானி எக்ஸ்பிரஸில், 'பி1' பெட்டியில் பயணித்த மலேசிய பெண்ணுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜார்கண்டில் கொரோனா பாதித்த முதல் பெண்ணும், மார்ச் 16ம் தேதி 23 பேருடன் ரயிலில் பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.